நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதாக சமுக வலைத்தலங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றன.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்தவாரம் திரைக்கு வர உள்ளது. இதனால் திரைப்படத்தை ப்ரொமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். இதற்காக அவர் மும்மை விமான நிலையத்திற்கு நேற்று வந்திருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மீண்டும் கர்ப்பமாக உள்ளார் என பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தில் சற்று குண்டாக இருப்பதால் ரசிகர்கள் அவ்வாறு பதிவிட்டு வருகின்றனர். மேலும் வயிறு தெரியாதவாறே அவர் உடைகளை அணிந்து வருகின்றார். எனினும் இந்த செய்தியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஐஸ்வர்யா ராய் – நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமணம் கடந்த 2007-ல் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.