இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இருக்கும் ரியல்வே துறை இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களில் ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் டிக்கெட்-களின் விலையை 25 சதவீதம் வரையில் திடிரென குறைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா.?
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் வரும் என கணிப்புகள் ஒருபக்கம் இருக்கையில் மறுபுறம் விமான போக்குவரத்து துறை தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து மலிவு விலை விமான சேவையில் பெரும் புரட்சி உருவாக காத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையில் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டு புதிய ரயில்கள், நவீன ரயில்கள், அதிக ரயில்கள், ரயில் நிலைய மேம்பாடுகள் என பலவற்றுக்கு அதிகப்படியான முதலீடுகள் செய்து பெரிய அளவிலான மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரயில் பயணிகள் எண்ணிக்கை குறிப்பாக ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் பிரிவுகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சமீபத்தில் இந்திய ரயில்வே துறையில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் ஆரம்பக்கட்டத்தில் 16 பெட்டிகள் கொண்டு இருந்தது. ஆனால் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் வெறும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு இருந்தது. சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகத்திற்கு பின்பு வந்த அனைத்து வந்தே பாரத் ரயில்களும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கும் தற்போது விலை குறைப்பிற்கும் முக்கிய காரணம் உண்டு. வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் எண்ணிக்கை பாதியாக குறைக்க முக்கிய காரணம் அதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரயில்களில் அனைத்து டிக்கெட்களும் விற்கப்படாமல் பல இருக்கைகள் காலியாக இருந்த காரணத்தால் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.