பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர் பாதுகாப்பு மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் ரூ. 55 முதல் ரூ. 200 வரை அவர்களின் வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அரசு கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.. இந்த தவணைகளை 60 வயது வரை செலுத்த வேண்டும்.. 60 வயதுக்கு பிறகு, இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 அரசு வழங்குகிறது..
PM Kisan Mandhan Yojana திட்டத்தில் பதிவு செய்வது எப்படி..?
- பொது சேவை மையத்திற்குச் சென்று பதிவு செயல்முறையைத் தொடங்கவும்
- ஆதார் அட்டை மற்றும் தேவையான ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்கவும்
- 2 புகைப்படங்கள் மற்றும் வங்கி பாஸ்புக்கும் தேவைப்படும்
- இந்த விவரங்களைச் சமர்ப்பித்து அளித்த பிறகு, விவசாயிகளின் தனிப்பட்ட ஓய்வூதிய எண் மற்றும் ஓய்வூதிய அட்டை உருவாக்கப்படும்.
குறிப்பு: விவசாயி பதிவு செய்வதற்கு தனி கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.. விண்ணப்பதாரர் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது PM கிசான் கணக்கு வைத்திருக்க வேண்டும்.