விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 17-வது தவணை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ. 6000 கிடைக்கும். இந்த பணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என 3 தவணைகளில் கிடைக்கும்.
இந்நிலையில், 16-வது தவணைத் தொகை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வெளியிட்டார். தற்போது 17-வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 17-வது தவணை மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தவணைகளை தொடர்ந்து பெற இ-கேஒய்சி முடிப்பது கட்டாயம் ஆகும். அப்படி செய்யாதவர்கள் உடனே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.