fbpx

விவசாயிகளே..!! 14-வது தவணை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் 3 தவணைகளாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 13-வது தவணை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், பலருக்கும் நிதி உதவி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளன. இந்நிலையில், அடுத்த தவணை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

  • முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், beneficiary status என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவு எண் அல்லது திட்டத்துடன் இணைக்கப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • பின்னர், திரையில் தோன்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட்டு submit பட்டனை கிளிக் செய்தவுடன் திரையில் பயனாளிகளின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். இதனை வைத்து உங்களுக்கு அடுத்த தவணை பணம் வருமா? வராதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Chella

Next Post

பொது மக்கள் கவனத்திற்கு...! 2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டத்தில் திருத்தம்...!

Wed Apr 5 , 2023
2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26ஏஏஏ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ரிட் மனு ஒன்றில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2023 நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் பிரிவில் (26ஏஏஏ)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.சந்தேகங்களை தீர்க்கும் நோக்கங்களுக்காக, கூறப்பட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட “சிக்கிமீஸ்” என்ற சொல், வருமான வரிச் சட்டம், […]

You May Like