fbpx

விவசாயிகளே!… ஒரேயொரு கிளிக் தான்!… அனைத்தும் உங்கள் கையில்!… உழவன் செயலி பயன்கள்!

தமிழக அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு முக்கிய செயலி ‘உழவன்’. இதில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை எந்த ஒரு தடையும் இன்றி அனைவரும் பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் முன்பதிவு, பயிர் மகசூல் இழப்பினை தடுத்திடும் பொருட்டு பயிர் காப்பீட்டு விபரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் தங்கள் கைப்பேசியிலேயே எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக உரங்கள் இருப்பு நிலை, மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா? இல்லையா? அவற்றின் விலை என்ன என்று இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள உதவுகிறது.

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண்ணுடன் கூடிய விதை இருப்பு நிலை, மேலும் விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு குறைந்த விலையில் வாடகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள் , பல்வேறு விலைப்பொருட்கள் மாநிலம் முழுவதுமுள்ள சந்தைகள் விலை விபரம் தெரிந்து கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான உண்மை விலை விபரங்களை எளிதில் அறிந்து கொண்டு இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க உதவும். தமிழகம் முழுவதும் உள்ள அணை நீர்மட்டம், தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அளிக்கும் வேளாண் செய்திகள், விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உதவிடும்.

வேளாண் கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அனைத்து பயிர்களுக்கும் படம் பார்த்து பரிந்துரை வழங்கும் பகுதி, பயிற்சி பெற முன்பதிவு செய்திடவும் உதவிடும் அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் விலை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும். இந்த உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய விவசாயிகள் தங்களது செல்போனில் கூகுளில் ப்ளே ஸ்டோர் சென்று உழவன் என தட்டச்சு செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Kokila

Next Post

’என் மூஞ்சிலயே முழிக்காத’..!! நிக்சன் உடனான உறவை திடீரென முறித்த ஐஷூ..!! இதுதான் காரணமா..?

Wed Nov 1 , 2023
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில், நிக்சன் மாயாவிடம் ரொம்ப பேக்காக இருக்கிறா, என் மூஞ்சிலையே முழிக்காத என்று ஐஷூ சொல்லிட்டாள். ஒன்றுமே இல்லை என்றால் எதுக்காக இவ்வளவு பேசுறாள் என்று கேட்கிறார். அதற்கு மாயா, நீ அவளை லவ் பண்ணுறியா என்று கேட்க, அதற்கு நிக்சன் […]

You May Like