fbpx

விவசாயிகளே..!! 14-வது தவணை பணம் குறித்த புதிய அப்டேட்..!! ரூ.2 ஆயிரம் எப்போது கிடைக்கும் தெரியுமா..?

இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, மே மாதம் 15ஆம் தேதி 14-வது தவணை தொகைக்கான பணத்தை மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் PM Kisan வெப்சைட்டில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

Chella

Next Post

’எப்போ பார்த்தாலும் வீடியோ தானா’..? ஆத்திரத்தில் காதலியை எரித்துக் கொன்ற காதலன்..!!

Sun Apr 23 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மாருதி ராதோடு. இவருக்கும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் நெருக்கமாக காதலித்து வந்துள்ளனர். பென்டெலா வெர்மா எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், டிக்-டாக் போன்ற செயலிகளில், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாருதி ராதோடுக்கு தெரியவந்தது. இதனால், கோபடைந்த அவர் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் […]
’எப்போ பார்த்தாலும் வீடியோ தானா’..? ஆத்திரத்தில் காதலியை எரித்துக் கொன்ற காதலன்..!!

You May Like