fbpx

விவசாயிகளே நாளை தான் கடைசி..!! உடனே விண்ணப்பித்தால் பயிர் காப்பீடு கிடைக்கும்..!!

விவசாயிகள் பருவமழை மற்றும் அதிகமான வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நஷ்டத்துக்கு பரிகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீடு என்பது மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கால அவகாசம் முடியும் கடைசி நாளில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது. அதாவது, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர்.

இதையடுத்து, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனை ஏற்று மத்திய அரசு காப்பீட்டுக்கான தேதியை நீட்டித்தது. அதன்படி, மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த தேதி நீட்டிப்பால் பல விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்தனர். இந்நிலையில் தான் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் அவசரமாக அருகே உள்ள இணைய சேவை மையங்கள் சென்று நாளைக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அலட்சியம் வேண்டாம்..!! உடனே மாத்துங்க..!! இல்லைனா உங்க வங்கிக் கணக்கு வரை ஆபத்து..!!

Tue Nov 21 , 2023
இணையத்தில் பல்வேறுத் தேவைகளுக்காக ஏராளமான கணக்குகளையும் அவற்றைத் திறப்பதற்கான பாஸ்வேர்டுகளையும் கையாண்டு வருகிறோம். ஆனால், அந்த பாஸ்வேர்டை பாதுகாப்பாக கட்டமைக்கிறோமா என்பது பெரும் கேள்விக்குறியே. பாதுகாப்பு குறித்த அலட்சியம் உள்ளிட்ட காரணங்களினால், ஊகிக்க மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இவை இணையத்தில் அலையும் ஹேக்கர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைக்கும்..! தனிப்பட்ட தகவல்களை சேமித்திருக்கும் கணக்குகள், தகவல்தொடர்புக்கானவை, வங்கி பரிவர்த்தனை கணக்குகள் உள்ளிட்ட பல ரக கணக்குகளை கையாள்வதில் […]

You May Like