fbpx

தவெக மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்..!! விருந்து வைத்து அசத்தும் விஜய்..!! கட்சி அலுவலகத்திற்கு வருகை..!!

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருந்த தவெக மாநாடு, மிகவும் வெற்றிகரமாக விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் அளித்தவர்களுக்கு பனையூரில் விருந்து வைத்து கெளரவிக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அவர்கள் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 230 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதேபோல், இந்த மாநாடும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்கியிருந்தனர். இதில் விவசாய நிலங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மாநாடு முடிந்த பிறகு மீண்டும் விவசாயம் செய்யும் வகையில் நிலத்தை தயார் செய்து கொடுக்கும் வகையில் ஒப்பந்தமும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் விருந்து வைக்கவுள்ளார். விருந்துக்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதற்காக நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டிற்கு நிலம் வழங்கி உதவி செய்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More : உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழகத்தை நோக்கி நகரும் அபாயம்..!! டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!

English Summary

It is said that Vijay has decided to honor those who donated land for the Vikravandi conference by holding a banquet in Panayur, and they have been summoned to the party office for this purpose.

Chella

Next Post

”நான் குடிச்சிட்டு அப்படித்தான் பண்ணுவேன்”..!! போதையில் தந்தைக்கு குறிவைத்த மகன்..!! குறுக்கே வந்த அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

Sat Nov 23 , 2024
Because of this, Selvam and Nagaraj have had frequent arguments.

You May Like