ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓசூரில் அமைந்துள்ள மலை கிராமத்தில் வசிப்பவர் மாதேவன் (37). இவர் ஒரு விவசாயி. மகாதேவன் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மகாதேவன் தோட்டத்திற்கு இன்று காலை காவல்துறையினர் சென்று சோதனை செய்தனர். அப்போது 7 அடி உயரத்தில் வளர்ந்திருந்த 6 கஞ்சா செடிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மாதவனை கைது செய்தனர்.
மேலும், மகாதேவனிடம் இருந்து 12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, கெஞ்சமரி (29) என்பவர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். அதன் பின்னர், அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.