fbpx

வறட்டு இருமலை போக்கும் எளிய வழி.! இதை கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க.!?

பொதுவாக நமக்கு சாதாரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவை விட சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சரியாக சில நாட்கள் ஆகும். குறிப்பாக வறட்டு இருமலால் பல தொல்லைகள் ஏற்படும். இதை வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து எளிதாகவும், உடனடியாகவும் சரி செய்யலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. சளி காய்ச்சலின் போது தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வறட்டு இருமலின் போது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர வேண்டும்.
2. சுடு தண்ணீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பை சரி செய்து வறட்டு இருமல் நீங்கும்.
3. தினமும் காலையில் எழுந்து சுடு தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை மற்றும் மூச்சு குழாயில் உள்ள கிருமிகள் நீங்கி இருமல் உடனடியாக சரியாகும்.
4. சுத்தமான பசு நெய் மற்றும் சுக்கு தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
5. குழந்தைகளுக்கு வறட்டு இருமல் ஏற்படும்போது கற்பூரத்தை பொடி செய்து தொண்டையில் தடவி வர இருமல் குணமாகும்.
6. இஞ்சி, மஞ்சள் மற்றும் துளசி சேர்த்து தேநீர் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
7. நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் கடுகு எண்ணெயுடன் உப்பு கலந்து தேய்த்து வர வேண்டும்.
8. ஏலக்காயை பொடி செய்து சுத்தமான பசு நெய் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் உடனடியாக சரியாகும். இவ்வாறு வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து வறட்டு இருமலை உடனடியாக போக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 1 அல்லது 2 வாரங்களுக்கு மேலாக வறட்டு இருமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

Rupa

Next Post

அங்கன்வாடியில் வேலை..!! 20 பெண்களை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்த இருவர்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Mon Feb 12 , 2024
பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றங்கள் வழியாக சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கின்றனர். இருப்பினும் கூட சிலர் பெண்களிடம் தவறாக நடந்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தானில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பெண்களை 2 பேர் […]

You May Like