fbpx

Fastag: மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!.. KYC அப்டேட் செய்வது எப்படி?

Fastag: இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag -க்கான KYC ஐ செய்து முடிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நீடித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank Ltd – PPBL) இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை மற்ற வங்கிகளுக்கு மாற்றுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகும், வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபிலிட்டி கார்டுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவும் பயன்படுத்தவும் PPBL வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆர்பிஐ (RBI) கூறியுள்ளது.

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (Indian Highways Management Company Limited) IHMCL தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான படிப்படியான வழிமுறையை காணலாம்: IHMCL வாடிக்கையாளர் போர்ட்டலுக்கு செல்லவும் அல்லது https://ihmcl.co.in/ என்ற இணியப்பை கிளிக் செய்யவும். உங்காள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது OTP ஐப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். “My Profile” பிரிவிற்கு சென்று “KYC” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சரியான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான வழிமுறை: NPCI (National Payments Corporation of India) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அல்லது https://www.npci.org.in/what-we-do/netc-fastag/product-overview என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு FASTag வழங்கிய வங்கியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வங்கியின் FASTag போர்ட்டலில் லாக் இன் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி மற்றும் சில வங்கிகள் ஃபாஸ்டேக்கை வெளியிட்டுள்ளன.

ஆஃப்லைனில் FASTag KYC புதுப்பிப்பதற்கான வழிமுறை: உங்கள் FASTag -ஐ வழங்கிய வங்கியின் கிளைக்கு செல்லவும். அங்கு சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உங்கள் FASTag கணக்கிற்கான KYC -ஐ புதுப்பிக்கக் கோரவும். Fastag KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன? பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது MNREGA வேலை அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்று. FASTag உடன் இணைக்கப்பட்ட வாகனத்தின் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC).FASTag வாடிக்கையாளர் சேவை எண்: FASTag KYC தொடர்பாக எதேனும் குழப்பம் இருந்தால், 1800 3006 9090 / 1860 266 6888 ஆகிய எண்கலில் தொடர்பு கொள்ளலாம்.

Readmore: இன்று இரவு 10.50 மணிவரை தான் டைம்!… ஒரு முறை வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Kokila

Next Post

Public Notice: அரசு உபகரணங்களை திருடினால் குற்றவியல் நடவடிக்கை...! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

Mon Mar 4 , 2024
அரசு உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள […]

You May Like