fbpx

கொழுப்பு கட்டியை இயற்கையாகவே கரைக்கலாம்..!! முன்கூட்டியே வராமல் தடுப்பது எப்படி..? ஆபத்து வருவதற்குள் உஷாரா இருந்துக்கோங்க..!!

கொழுப்பு மனித உடலுக்கு மிகவும் தீமை விளைவிக்கக் கூடியது. நம் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேரும்போது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய்கள் உடலில் உருவாகும். சில நேரங்களில் இந்த அதிகப்படியான கொழுப்பு நம் தசைகளுக்கு அடியில் சேர்ந்து கொழுப்பு கட்டிகளாக மாறி தொந்தரவு செய்யும். இவற்றை மருந்துகள் இல்லாமல் இயற்கை முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

ஆரஞ்சு பழம் : ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் அமில தன்மையும் உள்ளது. இந்த ஆரஞ்சு பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவற்றில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை இந்த கொழுப்பு கட்டிகளை கரைக்கும் வல்லமை கொண்டது. மேலும், இவற்றிற்கு விதைகள் கொண்ட ஆரஞ்சு பழங்களை மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும் .

கல் உப்பு ஒத்தடம் : நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பில் சோடியம் குளோரைடு மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பை வைத்து கட்டி அந்த முடிப்பை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணையில் துவைத்து தோசை கல்லில் மிதமான சூட்டில் வைத்து எடுக்க வேண்டும். பின்னர், இந்த முடிப்பை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர கொழுப்பு கட்டி கரையும்.

கொடிவேலி தைலம் : கொடிவேலி என்பது பல மருத்துவ நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாகும். இதிலிருந்து தயாரிக்கப்பட்ட தைலத்தை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வர விரைவில் கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும். இந்தக் கொடிவேலி தைலம் பெரும்பாலான சித்த மருத்துவக் கடைகளிலும் கிடைக்கும்.

விரதம்/ நோன்பு கடைப்பிடித்தல் : வாரம் ஒரு முறை உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறுவதற்கும் திசுக்களிலும் இரத்தத்திலும் கொழுப்பு படியாமல் இருப்பதற்கும் உதவுகிறது. இதன் காரணமாக கொழுப்பு கட்டிகள் உடலில் சேர்வதை தடுக்கலாம். மேலும், இதுபோன்று நோன்பு கடைப்பிடிப்பது நம் உடலில் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்று.

உடற்பயிற்சி : நம்மில் பலர் சாப்பிட்ட உடனேயே உடலுக்கு தேவையான இயக்கம் எதையும் கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்வது மற்றும் சாப்பிட்ட உடன் உறங்கச் செல்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக நம் திசுக்களில் கொழுப்பு படிந்து கொழுப்பு கட்டிகள் உருவாகிறது. இந்த கொழுப்பு கட்டிகள் உருவாகாமல் தடுப்பதற்கு நாம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.

Read More : காதில் கடும் வலி, வீக்கம், சீழ் வடிதல் பிரச்சனை இருக்கா..? சாதாரணமா நினைக்காதீங்க..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

English Summary

Fasting once a week without eating anything helps to flush out waste products from our bodies and prevent fat from accumulating in our tissues and blood.

Chella

Next Post

இந்த ஒரு காயை அடிக்கடி சாப்பிட்டா போதும்.. இனி சுகருக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்..

Wed Feb 19 , 2025
vegetable that lowers the sugar level in blood

You May Like