பொதுவாகவே பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது கொழுப்பு தான். உடலில் அதிகமாக கொழுப்பு இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பது யாரும் அறிந்ததே. அதுபோலவே உடலில் அதிக கொழுப்பு இருந்தாலும் முகத்தில் தாடை பகுதி கொழு கொழு என்று இருக்கும். இரட்டை தாடையானது கழுத்தின் அடிப்பகுதியில் கொழுப்பு படிந்திருப்பதாகும். இதற்கு முக்கியமாக மரபணு பிரச்சினைகள் மற்றும் வயதாகுதல் போன்ற காரணங்களாலும் இருக்கின்றது. இது ஒருவருடைய தோற்றத்தையே முழுவதுமாக மாற்றிவிடும். இதனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த வழியை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் உப்பு மற்றும் சர்க்கரையை குறைத்துக்கொள்ளவும். கர்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொள்ளவும். ஓடுதல், சைக்கிள், நீச்சல் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்படுதல் வேண்டும். கன்னப்பகுதியில், தாடை, தொண்டைப் பகுதியில் உள்ள சதையை குறைக்க இலகுவாக பயிற்சிகளை செய்யலாம். இரவில் குறைந்தது 7-8 மணி நேரம் நித்திரை செய்ய வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதலை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள சருமத்திற்கு ரத்த ஒட்டமானது சீராக கிடைப்பதற்கு மசாஜ் செய்ய வேண்டும்.
கொழுப்பை கரைக்கக் கூடிய உணவுகள்: ஒரு நாளையில் 3 முறையாவது தக்காளி ஜூஸ் குடித்து வருவதன் மூலம் உடல் எடையானதும் குறையும், முகத்தில் உள்ள கொழுப்பும் குறையும். பிரக்கோலியை சாலட், சூப்கள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு குறைக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும். தினமும் வெறும் வயிற்றில் 1 தே.கரண்டி தேங்காய் எண்ணெய்யை குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.