ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரின் இந்தச் செயலால் மனமுடைந்த சிறுமி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தை, தாய், தாயின் நண்பர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.