fbpx

திடீரென சீமான் வீட்டை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்..!! போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு..!!

தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உடல் இச்சை வந்தால் தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக்கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா..? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது..?

கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் தந்தை பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் உங்கள் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று கூறுவது பகுத்தறிவா? பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என சீமான் பேசியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் தான், தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பெரியார் குறித்த தனது கருத்தை சீமான் திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

Read More : டியூஷன் சாருடன் காதல்..!! ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி..!! அங்கன்வாடி கட்டிடத்திற்குள் நடந்த பயங்கரம்..!!

English Summary

The incident of Father Periyar’s Dravidar Kazhagam members attempting to blockade Seeman’s house in protest of his defamatory remarks about Father Periyar has caused a stir.

Chella

Next Post

இனி விவகாரத்து செய்தால் கணவன் - மனைவி இருவருக்குமே தண்டனை..!! அதிரடி உத்தரவு போட்ட வடகொரியா..!!

Thu Jan 9 , 2025
North Korean leader Kim Jong-un has reportedly ordered divorcing couples to be sent to labor camps for up to 6 months.

You May Like