சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மனைவி செல்லம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து மகன் முருகேசனுடன் வாழ்ந்து வருகிறார். அடைக்கலம், வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து கள்ள உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அடைக்கலம் மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று தலையில் பலத்த காயத்துடன் அடைக்கலம் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அடைக்கலத்தை மகன் முருகேசன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சாக்கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில், அடைக்கலம் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதேபோல் அடைக்கலத்தின் கள்ளக்காதலி சிவகாமிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகன் முருகேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். குடும்பத்தை பிரிந்த அடைக்கலம் திருப்பூரில் புரோட்டோ மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுளாக சொந்த ஊருக்கு வந்து சிவகாமியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.