அப்பா நன்றாக தேறி வந்தார். ஆனால் திடீரென அவர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என மனோபாலாவின் மகன் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோபாலா நாகர்கோவிலில் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர். அவரது இயற்பெயர் பாலசந்தர். திரைப்படத்திற்காக மனோபாலா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர், கமல்ஹாசனின் பரிந்துரையின் பேரில் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது பணியை தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோபாலாவுக்கு ஒரே ஒரு மகன். அவரது பெயர் ஹரீஷ். அவர் அமெரிக்காவில் இருந்தார்.
ந்தைக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார். அவர் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதுகுறித்து மனோபாலாவின் மகன் ஹரீஷ் கூறுகையில், அப்பா ஆரம்பத்திலிருந்தே உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தார். இதயத்தில் பிரச்சனை இருந்தது, மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தோம். நன்றாக தேறி வந்தார். கடைசியாக ஒரு வாரமாகத்தான் அவரது உடல்நிலை மோசமானது. நன்றாக நடந்தார். பிசியோதெரபி உடற்பயிற்சிகளை செய்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்பா திடீரென இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) அப்பாவுக்கு உயிர். நீங்கள் வந்ததற்கு நன்றி. நாளை காலை 10 மணிக்கு அப்பாவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என ஹரீஷ் தெரிவித்தார்.
மனோபாலாவின் மகன் ஹரீஷுக்கும் பிரியாவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்கான திருமண வரவேற்பு கிண்டி கத்திபாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன், நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், ராதாரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரியா அமெரிக்க வாழ் தமிழ் பெண். ஹரீஷும் பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.