fbpx

FD வட்டி விகிதங்கள் அதிரடி குறைப்பு..!! எந்த வங்கியில் என்ன நிலவரம்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களை சீராக உயர்த்தி வருகிறது. இதனால், வட்டி விகித உயர்வுக்கு ஏற்ப கடன் வட்டி மற்றும் வங்கி திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் உயர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரித்தன. எனினும் சில வங்கிகள் தற்போது தங்கள் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

நீங்கள் FD-யில் முதலீடு செய்ய விரும்பினால், எந்த வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். FD திட்டங்களில் சமீபத்தில் வட்டி விகித குறைப்பை அமல்படுத்தி இருக்கும் வங்கிகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் நேஷனல் பேங்க் :

பஞ்சாப் நேஷனல் வங்கியானது தனது single tenures ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான, குறிப்பாக ரூ.2 கோடிக்கும் குறைவான திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 1 ஆண்டு tenure கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% குறைத்து தற்போது 6.75%-ஆக மாற்றியமைத்துள்ளது. இதேபோல் 666 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.25%-லிருந்து 7.05%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி :

ஆக்சிஸ் வங்கியான்து அதன் Single-tenure ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 20 பேஸிஸ் பாயிண்ட்ஸை (basis points) குறைத்துள்ளது. இந்த திருத்தத்தை தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கி வழங்கும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்தை பொறுத்து இப்போது 3.5% முதல் 7.10% வரை இருக்கும்.

மேலும் 5 நாட்களுக்கும் குறைவான மற்றும் 13 மாதங்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-களுக்கான வட்டி விகிதம் 7.10%-லிருந்து 6.80%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13 மாதங்கள் முதல் மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவான முதிர்வு காலம் கொண்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் 7.15%-லிருந்து 7.10%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் கடந்த மே 18, 2023 முதல் அமலில் உள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா :

நவம்பர் 2022-ல் இந்த வங்கியானது FD திட்டங்களில் பொதுமக்களுக்கு 7.30%, மூத்த குடிமக்களுக்கு 7.80% மற்றும் சூப்பர் சீனியர்களுக்கு 8.05% என்கிற வகையில் அதிக வட்டி விகிதங்களை வழங்கியது. ஆனால், தற்போது பொதுமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50% மற்றும் சூப்பர் சீனியர்களுக்கு 7.75% என்ற அளவில் வட்டி வழங்குகிறது.

நீங்கள் மேற்கண்ட இந்த வங்கிகளில் FD-க்களில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால் குறிப்பிட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி வருவாய் முந்தைய வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Chella

Next Post

பவுன்சர்களுடன் நடிகை திவ்யா வீட்டிற்குள் நுழைந்த அர்னவ்..!! நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

Wed Jun 14 , 2023
சீரியல் பிரபலங்கள் அர்னவ்-திவ்யா என கூறினாலே என்ன பிரச்சனை என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் செய்தார்கள், திவ்யா கர்ப்பமானார், ஆனால் அர்னவ் தன்னை வயிற்றில் உதைத்துவிட்டார் என போலீஸில் புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரவர் அவர்களது வேலையை பார்த்து வர சமீபத்தில் திவ்யாவுக்கு குழந்தையும் பிறந்தது. அதன்பின் திவ்யா அர்னவ் குறித்து பரபரப்பு […]

You May Like