fbpx

பெடரேசன் கோப்பை 2024!… ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra: 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Readmore: நகர்ப்புறங்களில் குறைந்த வேலையின்மை!… எவ்வளவு தெரியுமா?… தேசிய மாதிரி ஆய்வுக் கணக்கெடுப்பு!

Kokila

Next Post

அந்தரங்க புகைப்படம்..!! மீண்டும் புயலை கிளப்பிய சுசித்ரா..!! சரியான பதிலடி கொடுத்த த்ரிஷா..!!

Thu May 16 , 2024
கடந்த 2016ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின்னர் சுசித்ராவின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அவரது கணவர் கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுசித்ரா சில ஆண்டுகள் மீடியா பக்கமே […]

You May Like