fbpx

பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா..!! பயிற்சி மருத்துவரின் கேவலமான செயல்..!! பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்துவதற்காக தனி கழிப்பறை உள்ளது.

இந்நிலையில், பெண் செலிவியர் ஒருவர் நேற்று அந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பேனா வடிவிலான கேமரா ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜாவிடம் தெரிவித்த நிலையில், அவர் விசாரணை நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33) என்பவர் தான் கழிப்பறையில் ரகசிய கேமராவை வைத்தது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து பயிற்சி மருத்துவர் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “வெங்கடேஷ் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்எஸ் ஆர்தோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்றபோது சக ஊழியர்களுடன் இணைந்து வெங்கடேசும் கழிப்பறையில் சென்று பார்த்துள்ளார்.

அவர் அந்தக் கேமராவில் இருந்து மெமரி கார்டை எடுத்துள்ளார். இதனால் போலீஸ் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியபோது, வெங்கடேஷ் தான் குற்றவாளி என தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார். அவருக்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Read More : மக்களே..!! மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

English Summary

A female volunteer went to the restroom yesterday and was shocked to see a pen-shaped camera there.

Chella

Next Post

மக்களே...! 7 மாவட்டங்களில் நாளை 500 இலவச மருத்துவ முகாம்கள்...! அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு..!

Sat Nov 30 , 2024
500 free medical camps to be held in 7 districts tomorrow

You May Like