செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கும் விதமாக, திடீரென்று 50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகவே அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் தான் கல்லூரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு நகர காவல் துறையினர் உள்ளிட்டார் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாலியல் தொல்லை வழங்கிய மருத்துவர் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆகவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய புகாரில் மருத்துவர் ஜிதேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.