கருத்தரிப்பு மையங்கள், மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
இதன் மூலமாக போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோத கருமுட்டை விற்பனையை தடுக்க தமிழகத்தில் உள்ள கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருத்தரிப்பு மையங்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.