fbpx

#BREAKING | ”தமிழ்நாட்டில் மேலும் சில டாஸ்மாக் கடைகள் மூடல்”..!! அமைச்சர் முத்துசாமி பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்கள், 49 நடுத்தர வகை மதுபானங்கள், 128 பிரீமியம் வகை பிராண்ட் மதுபானங்கள், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்கினால் உடனே புகார் தெரிவிக்கலாம் எனக்கூறிய அவர், டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தில் மாற்றம் வரவிருப்பதாக வெளியான செய்திக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Chella

Next Post

பெண்களே.! தும்மல் வரும்போது போது சிறுநீர் கசிவு ஏற்படுகிறதா.! ஆயுர்வேத மருத்துவபடி இதை பண்ணுங்க போதும்.!

Sat Feb 3 , 2024
பொதுவாக பெண்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் வயதிற்கு வருவது முதல் வயதான காலம் வரை பல்வேறு வகையான நோய் தாக்குதல்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் பலருக்கும் இது ஒரு பிரச்சனை என்று தெரியாத அளவிற்கு இருந்து வரும் நோய்தான் தும்மல் மற்றும் இருமல் வரும் போது கட்டுப்பாடுன்றி சிறுநீர் கசிவது. யூரினரி இன்கான்டினன்ஸ் என்று சொல்லபடகூடிய சிறுநீர் கசிவு நோய் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்பும், 40 […]

You May Like