fbpx

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி!… 2வது இடத்தில் தமிழக வீராங்கனை வைஷாலி!

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செய்ஸ் போட்டியின் 6வது சுற்றில் ரஷ்யா வீராங்கனை கோரியாச்கினாவுடன் டிரா செய்து தமிழக வீராங்கனை வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

பிரிட்டனின் ஐல் ஆப் மேனில், ‘கிராண்ட் சுவிஸ் ஓபன்’ செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன், அமெரிக்காவின் ஆரோனியன், பேபியானோ காருணா உள்ளிட்ட 114 பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறுகின்றன. பெண்கள் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, முன்னாள் உலக சாம்பியன் உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 23வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நான்கு சுற்றுகளின் முடிவில் தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 6வது சுற்றுப்போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி – ரஷ்யாவின் முதல் நிலை வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கின்ஸ் உடன் மோதினார். இதில் கோரியாச்கினாவுடன் டிரா செய்து 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். கஜகஸ்தானின் பிபிசரா அசாபுயேவாவை தோற்கடித்து, 5 புள்ளிகளுடன் உக்ரைனின் அன்னா முசிச்சுக் முதலிடத்தில் உள்ளார்.

Kokila

Next Post

மாணவர்களே கலந்தாய்வுக்கு தயாரா இருங்க..!! தேதி வெளியீடு..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Wed Nov 1 , 2023
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ளது. இதில் 15 சதவீதமான 1,650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. […]

You May Like