சுதந்திரமான வாழ்க்கை என்பது இந்திய மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலரது ரத்தம் தான் இப்போது நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சுதந்திரம். பல போராட்ட வீரர்களில் ஒரு சிலரின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்று சிற்றூரில் பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி.
தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காக்க, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர். இந்நிலையில் தான், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) April 17, 2025
இதனையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தாய்மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர்,
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.