சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சில்-ம் நீண்ட கால தாமத்திற்கு பின்பு ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கலை தீர்க்க வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகஸ்ட் 2ம் தேதி கூடுகிறது. ஜிஎஸ்டி சட்டத்தில் இதற்கான மாற்றங்கள் மற்றும் கவுன்சிலின் ஒப்புதலுக்கு முன் வைக்கப்படும் என தெரிகிறது, மேலும் இக்கூட்டத்தில் எவ்விதமான வரி மாற்றமும் இருக்காது என கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தின் முடிவில் பல மாதங்களாக கிடப்பில் இருந்த ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் ஆன்லைன் கேமிங் துறையில் ஒருவர் 100 ரூபாய் செலுத்துகிறார் எனில் இதில் 28 சதவீத ஜிஎஸ்டி போக 72 ரூபாய்க்கு மட்டும் தான் பெட்டிங் செய்ய முடியும். 72 ரூபாயும் வெற்றி பெற்று திரும்ப எடுக்கிறார் எனில் அவருக்கு platform fees போக 54 ரூபாய் கிடைக்கும். இதில் 30 சதவீதம் டிசிஎஸ் பிடித்தம் உள்ளது.