fbpx

இன்று இறுதிக்கட்ட தேர்தல்!! மாலை வெளியாகவுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. அதோடு மாலை கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாக உள்ளன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இந்த தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்திருக்கிறது. இறுதிக்கட்ட தேர்தல் வரும் இன்று(ஜூன் 1) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இறுதிக்கட்ட வாக்குப்பதிவானது 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் ஒடிசா மாநிலத்தின் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் முதல்கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 21, மே 7, மே 13 என வரிசையாக நடைபெற்று, தற்போது ஜூன 1ஆம் தேதியான இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும் மோதிக் கொள்கின்றன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார். எனினும், இந்த முறை பாஜகவை வெற்றி பெற விடக்கூடாது என்ற முனைப்பில் இண்டியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், மாலை 6.30 மணிக்கு தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. பல்வேறு செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகள், ஏஜென்சிகள் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடவுள்ளன. இதனால் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Read More:குமரியில் மோடி..! “தியானம் முடிந்ததும் இதுதான் நடக்கும்” – அடித்து சொன்ன பிரசாந்த் பூஷன்!!

Rupa

Next Post

Lok Sabha elections 2024: 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை பறிமுதல்..! 2ஆம் இடத்தில் தமிழகம்..!

Sat Jun 1 , 2024
Lok Sabha elections 2024: Cash and jewelery worth Rs 1,100 crore seized..! Tamil Nadu in 2nd place..!

You May Like