fbpx

சீனாவில் ஊழல் குற்றம் புரிந்த நிதி அமைச்சருக்கு மரண தண்டனை..!

சீனாவில் நிதி பிரிவு தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில், பல உயர்மட்ட அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி, நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர் உள்ளனர்.

சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் ஃபூ ஜெங்குவா. அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் செய்ததற்காக அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன டெய்லி வெளியிட்டு இருக்கும் செய்தியில், ஜிலின் மாகாணத்தில் இருக்கும் சாங்சன் நகரில் அமைந்த மக்கள் கோர்ட் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அவர் தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவோ அல்லது தனது உறவினர்கள் மூலமாகவோ, வர்த்தக நடைமுறைகள், சட்டப்பூர்வ வழக்குகள் போன்றவற்றில் மற்றவர்கள் பலனடையும் வகையில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விசயங்களை செய்து முடிப்பதற்காக சட்டவிரோத வகையில் நடந்துள்ளார். மேலும் முறைகேடாக ரூ.58.83 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களாக பெற்றுள்ளார். இதனை நீதிமன்றம் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டாக முன் வைத்து இருக்கின்றனர். இதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Rupa

Next Post

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை..! ’துணிவு’ படத்தின் கதை இதுதான்..!

Thu Sep 22 , 2022
மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளன. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித்குமார் 3-வது முறையாக இணையும் படம் ’துணிவு’. இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]
லண்டனுக்கு குடிபெயரும் நடிகர் அஜித்..!! கோடிகளில் வீடு வாங்கியது இதற்கு தானாம்..!!

You May Like