fbpx

Tn Govt: முக்கிய அறிவிப்பு…! புனித பயணம் செல்ல நிதியுதவி…! விண்ணப்பம் வரவேற்பு…

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்) தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே உள்ள நடைமுறைகளுடன் ECS முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ADMK | தமிழகமே பரபரப்பு..!! இரட்டை இலை யாருக்கு..? இன்று வெளியாகிறது தீர்ப்பு..!!

Sat Mar 16 , 2024
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதியை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தல் பற்றிய அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிகரமாக தொகுதி பங்கீட்டையும் முடித்து விட்டது. திமுக மற்றும் […]

You May Like