fbpx

‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..’ தமிழ் சினிமாவில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் பாடல்கள்..!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் (Churches) இரவு முதலே ஆராதனைகள் நடைபெற்றது. இயேசு பிரான் (Jesus Christ) பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். வீடுகளில் வண்ண அலங்கார குடில்கள் அமைத்தும் புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவார்கள். 

தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களைப் போலவே கிறிஸ்துமஸ் விழா நாட்களில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல்கள் தவறாமல் ஒலிக்கும். மதங்களைக் கடந்த ஒரு சமூக நல்லிணக்கம் தமிழ் மக்களிடம் எப்போதும் உண்டு. ‘மிஸ்ஸியம்மா’ முதல் ‘மின்சாரக் கனவு’ வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கிறிஸ்துமஸ் பாடல்கள் பல உண்டு. அவற்றில் சிறப்பான பாடல்களின் தொகுப்பு இதோ

மின்சார கனவு – அன்பெனும் மழையிலே : 1997 ஆம் ஆண்டு மின்சாரகனவு படம் வெளியான நிலையில் இதில்  அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் கஜோல் இயேசு பிறப்பை பாடுவது போன்று ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். வைரமுத்து எழுதிய ‘அன்பெனும் மழையிலே’ பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

தவப்புதல்வன் – கிங்கினி கிங்கினி : 1972 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பண்டரி பாய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “தவப்புதல்வன்”. இப்படத்தில் ‘கிங்கினி கிங்கினி என வரும் மாதாகோவில் மணியோசை’ என்ற பாடல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பின்னணியில் இடம் பெற்றிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்பாடலை கண்ணதாசன் எழுத டி.எம்.சௌந்தர ராஜன் பாடியிருப்பார். 

ஞான ஒளி – தேவனே என்னை பாருங்கள் : 1972 ஆம் ஆண்டு பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ஞான ஒளி’. இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இடம் பெற்ற ‘தேவனே என்னை பாருங்கள்.. என் பாவங்கள் தம்மை வாங்கிச் செல்லுங்கள்’ என்ற பாடல் மிக பிரபலமானது. இந்த பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

Read more ; உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை குறிக்கும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்… ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..

English Summary

Find out about popular Christian songs featured in Tamil cinema.

Next Post

சாம்பார் என ஜெமினி கனேசனுக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பலருக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Wed Dec 25 , 2024
In this post we will see the reason behind the name 'Sambar' for Gemini Ganesan.

You May Like