fbpx

விரல் ரேகைகளை மாற்றி வெளிநாடு செய்ய முயற்சி …

பலே ஆசாமிகள் கைது !

கைவிரல் ரேகைகளை மாற்றி வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற பலே ஆசாமிகளை ஹைதராபாத் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் ஒய் . எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாக மூனீஸ்வர் ராவ் , எஸ் வெங்கட் ரமணா, ராமகிருஷ்ண ரெட்டி , போவிலா சிவசங்கர். ,இவர்களில் நாக மூனீஸ்வர் ராவ் கதிரியக்கத்துறையில் படித்துள்ளார், வெங்கட்ரமனா என்பவர் தனியார்மருத்துவமனையில் அனஸ்தீசியஸ்டாக பணிபுரிந்து வருபவர்கள் . மற்ற இருவரும் கட்டிடத்தொழிலில் ஈடுபட்டு வந்த சாதாரண கூலித் தொழிலாளிகள் ஆவர்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாக மூனீஸ்வரின் உதவியை நாடியுள்ளனர் . முறையான ஆவணங்கள் இன்றி வேறு ஒரு நபர்களின் கை ரேகையை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் வெளிநாடு செல்ல எண்ணியுள்ளனர்.

எனவே அனஸ்தீசியஸ்ட் வெங்கடரமணாவிடம் பேசி இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்துள்ளனர். இதற்காக கை விரலில் சிறிய அறுவைசிகிச்சை மேற்கொண்டால் போதுமானது. எனவே இந்த குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெங்கடரமணாவிடம் சென்று 25,000 ரூ. கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் குவைத்திற்கு எளிதாக சென்றுவிடலாம் என்றும் அவர்கள் கனவு கண்டுள்ளனர்.

போலீசிடம் சிக்கியது எப்படி ?

பயோமெட்ரிக் சோதனையின் போது கைவிரல் ரேகையில் ஏதோ மாற்றம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டர். அந்த விசாரணையில் போலி கை ரேகை மூலம் குவைத்திற்கு செல்ல இருந்தது தெரியவந்தது.  இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

Next Post

தமிழக மீனவர்களிடம்  பறிமுதல் செய்யப்படும் படகுகள் இலங்கை மீனவர்களுக்குத் தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை !

Fri Sep 2 , 2022
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், இந்திய எல்லையைத் தாண்டிஇலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருவது அதிகரித்து வருகின்றது. சட்ட விரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து வரும் பட்சத்தில் மீனவர்களின் படகுகளை […]

You May Like