போலி பத்திரப்பதிவுகளை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரப்பதிவின்போது சொத்து விற்பவர், வாங்குபவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது வழக்கம் என்பதால், இதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் ஆணையம் சில மாற்றங்களை செய்ததால், புதிய மற்றும் பழைய கருவிகள் மூலம் விரல் ரேகை பதிவு செய்யப்படும் என பதிவுத் துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், “ஆதார் வழி ஆவணதாரர்களை அடையாளம் காண “Mantra MFS 100” (LO Finger print Device) στο தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஆதார் ஆணையம் கூறியுள்ளவாறு, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட L1 Finger print Device-களை மட்டுமே அக்.1ஆம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி, நமது துறையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் “Mantra MFS 110” என்ற L1 Finger print Device திருவாளர்கள் எல்காட் நிறுவனம் வழி முன்பே வழங்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை சட்டத்திற்கு ஏற்ப ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமித்து வைக்க வேண்டியிருப்பதாலும், L1 Finger Print Device-களைப் பொருத்து விரல் ரேகையை சேமிக்க முடியாது என்பதாலும், Lo – Finger Print Device ஆவணதாரர்களின் கைரேகையை சேமிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இனிவரும் காலங்களில் 2 முறை விரல் ரேகை கருவிகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, ஆவணதாரர்களை அடையாளம் காண ஸ்டார் 2.0 மென்பொருளில் புதிய விரல் ரேகை கருவியினை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்..!! இனி உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்கப்போகுது..!!