fbpx

நேட்டோ அமைப்பில் இணைந்த பின்லாந்து.. எச்சரிக்கை விடுத்த ரஷ்யா..

நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது..

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இதில் ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31-வது நாடாக இணைந்துள்ள்ளது.. நேட்டோவின் 31வது உறுப்பினராக பின்லாந்தை வரவேற்பதாக தெரிவித்தார்.. மேலும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் கூறினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரான்ஸ் உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1949-ம் ஆண்டு நேட்டோவை நிறுவின. ஐரோப்பாவில் அமைதியை பாதுகாப்பதும், நேட்டோ உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், அப்போதைய சோவியத் யூனியனின் அச்சுறுத்தலில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் தான் நேட்டோவின் பிரதான நோக்கம் ஆகும். ஒவ்வொரு நேட்டோ உறுப்பு நாடும் கூட்டணியின் செயல்பாட்டு செலவுகளுக்கு பங்களிக்கிறது. மற்ற அனைத்து உறுப்பினர்களையும் விட அமெரிக்கா பாதுகாப்பிற்காக அதிகம் செலவழிப்பதால், அது தொடக்கத்தில் இருந்து நேட்டோவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் பின்லாந்து நேட்டோவில் இணைந்ததற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ, பின்லாந்து நேட்டோ உறுப்பினராக ஆவதற்கு ரஷ்யா பதிலடி கொடுப்பதன் மூலம் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “நாங்கள் மேற்கு மற்றும் வடமேற்கில் எங்கள் இராணுவ திறனை வலுப்படுத்துவோம். பின்லாந்து பிரதேசத்தில் மற்ற நேட்டோ உறுப்பினர்களின் படைகள் நிலைநிறுத்தப்பட்டால், ரஷ்யாவின் இராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம்.” என்று தெரிவித்தார்..

1,300 கிமீ (810 மைல்) எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, 2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்ததில் இருந்து, நேட்டோ உடனான நல்லுறவை படிப்படியாக அதிகரித்தது.. உக்ரைனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பித்திருந்தது.. அப்போது முதலே ரஷ்யா பின்லாந்தை எச்சரித்து வருகிறது.. இந்நிலையில் தற்போது நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளது.. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயற்சித்து வந்த போது தான் ரஷ்யா போரை தொடங்கியது.. உக்ரைன் மீதான போருக்கு இது முக்கிய காரணமாக கருதப்பட்ட நிலையில், தற்போது பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது சர்வதேச அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

பெண்கள் உள்ளாடை(Bra) அணிவதால் இவ்வளவு பிரச்சனைகளா?... நன்மைகளும்!... தீமைகளும்!

Wed Apr 5 , 2023
பெண்கள் உள்ளாடை அணிவதால் ஏற்படும் உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் இதனை தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்களிடம் உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். எல்லோரும் அணிகிறார்களே நாமும் அணியலாம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். அந்த உள்ளாடைகள் நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதனை அவர்கள் ஆராய்வதில்லை. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடையான பிரா பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை. ஏனெனில் அதுதான் அவர்களுடைய உடலோடு […]

You May Like