உக்ரைன், ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கை போன்ற போர் அல்லது நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களை விட இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர் என்பதை உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 வெளிப்படுத்தியுள்ளது. ஆம்.. உலக மகிழ்ச்சி பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. 2022 என்பது உலகிற்கு நெருக்கடியான ஆண்டாகும்.. கொரோனா தொடங்கி, உக்ரைன் போர், பணவீக்கம், பூகம்பங்கள் மற்றும் பல காலநிலை பேரழிவுகள் வரை பல நெருக்கடிகள் ஏற்பட்டன..

ஆனால் 2022-ல் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பது பற்றிய தெரிந்துகொள்ள உலக மகிழ்ச்சி என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த ஆய்வில், தொடர்ந்து 6வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து உள்ளது.. இந்த பட்டியலில் டென்மார்க் 2-வது இடத்திலும் மற்றும் ஐஸ்லாந்து 3-வது இடத்திலும் உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய இரண்டும் மகிழ்ச்சியற்ற நாடுகளாக கடைசி இடத்தில் உள்ளன.. அதே நேரத்தில் இந்த பட்டியலில் இலங்கை 112வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், ஈராக் 98வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, நேபாளம், சீனா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை விட பின்தங்கி 126வது இடத்தில் உள்ளது.
உலக மகிழ்ச்சி அறிக்கையானது 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து உலகளாவிய கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.. தேசிய மகிழ்ச்சி, நம்பிக்கை, அரசின் செயல்திறன், மக்களின் சொந்த மகிழ்ச்சியையும் சமூகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், துயரத்தையும் அளவிடுவதற்கு சமூக ஊடகங்கள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன? ஆகிய கேள்விகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது..
எனினும் இந்த கடினமான ஆண்டுகளில் கூட, எதிர்மறை உணர்ச்சிகளை விட, நேர்மறை உணர்ச்சிகள் எதிர்மறையானவற்றை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன, மேலும் நேர்மறையான சமூக ஆதரவின் உணர்வுகள் தனிமையை விட இரண்டு மடங்கு வலுவாக உள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சுவாரஸ்யமாக, உலக மகிழ்ச்சி அறிக்கையில் ரஷ்யா-உக்ரைன் போர் இரு நாடுகளும் தரவரிசையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ரஷ்யா 72வது இடத்திலும், உக்ரைன் 92வது இடத்திலும் உள்ளது.