fbpx

புதிய பாராளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு தெரிவிக்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் வழக்கு…!

புதிய பாராளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு தெரிவிக்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்‌ தலைவர்‌ பதவியிலிருந்து பிரிஜ்‌பூஷன்‌ சரண்‌ சிங்கை நீக்கக்‌கோரியும்‌, பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக அவர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரியும்‌ கடந்த ஏப்ரல்‌ 23-ம்‌ தேதி முதல்‌ மல்யுத்தவீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ டெல்லி ஜந்தர்‌ மந்தரில்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. மல்யுத்த வீரர்‌,வீராங்கனைகள்‌ போகாத்‌, சாக்சி மாலிக்‌, பஜ்ரங்‌ புனியா உள்ளிட்ட ஏராளாமனார்‌ ஒருமாதத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌.

இதனிடையே நேற்று புதியநாடாளுமன்ற கட்டிடம்‌ திறப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிமல்யுத்த வீரர்கள்‌ பேரணி செல்ல முயற்சித்தனர்‌. அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்‌, கைது செய்துள்ளனர். இந்த நிலையில் போராட்டம் நடத்திய நபர்கள் மீது டெல்லி போலீஸார் எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்தனர்.

Vignesh

Next Post

புதுமை பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ள நபர்களுக்கு மாதம்‌ ரூ.1,000 உதவித்தொகை...! விண்ணப்பிக்க கடைசி நாள்...?

Mon May 29 , 2023
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும்‌ தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும்‌, 2023-ம்‌ ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ அரூர்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியில்‌ 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. வயர்மேன்‌ பிரிவிற்கு 8-ம்‌ வகுப்பிலும்‌, ரெப்ரிஜிரேசன்‌ & AC டெக்னீசியன்‌,பிட்டர்‌, மெக்கானிக்‌ ஆட்டோபாடி ரிப்பேர்‌ […]

You May Like