பிராங்க் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பல்வேறு வகையில் முதியவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில் காவல்துறை கண்காணிப்பு நடத்தி வந்தது. பிராங்க் வீடியோ என்ற பெயரில் பெண்கள் முதியோர்கள் சம்மதமின்றி அவர்களுக்கு தொல்லை தரும் வகையில் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கோவை 360 டிகிரி சேனல் செயல்பட்டுள்ளது. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியேக்கள் தொடர்பாக காவல்துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் இதே போல ஒருவர் சம்மதமின்றி இந்த சேனல் வீடியோக்கள் வெளியிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது போன்று பொதுமக்களின் மனதுக்கும் உடலுக்கும் துன்பம் தரும்வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் சேனல்கள் , மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
சில சேனல்கள் பிராங்க் ஒன்றை மட்டுமே நம்பி ஒளிபரப்பு செய்து வந்தது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் யூடியூப் நடத்தும் குழுக்கள் பீதியில் உள்ளனர். குறும்பு வீடியோக்கள்எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதத்து வருகின்றனர். சில வீடியோக்களில் முகம் சுழிக்கும் விதத்தில் பிராங்க் காட்சிகள் உள்ளன. இந்த செயல்கள் சம்மந்தப்பட்டவர்களையும் பாதிக்கும் . முதியாவர்கள் , பெண்களை இது போன்ற சம்பவங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றத.
பிறரை பயமுறுத்துவது போன்ற பிராங்க்கால் அவர்கள்மன ரீதியாக அதிர்ச்சி அடைவதால் முதியோர்கள் கலக்கமடைகின்றனர். இது எதிர்விளைவை ஏற்படுத்துவதாக அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.