fbpx

மீண்டும் மீண்டுமா?? குவைத்தில் மற்றொரு தொழிலாளர் கட்டடத்தில் தீ விபத்து!! இந்தியர்கள் காயம்..

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தின் சமையலறையில் தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் முழுவதும் பரவி, புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தொழிலாளர்கள் பலர் தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குவைத் மஹ்பூலா பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.  தொழிலாளர் குடியிருப்பின் தரைத்தளத்திலிருந்து பரவிய தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து அச்சமடைந்த 2 இந்திய தொழிலாளர்கள் மாடியில் இருந்து குதித்ததில் காயமடைந்தனர்.  காயமடைந்த 2 இந்திய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more ; வீட்டுக் கடன் EMI செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? முழு விவரம் இதோ!!

English Summary

It has been reported that two Indians have been injured in a fire in another workers’ residence in Kuwait.

Next Post

”மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்”..!! மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை..!!

Sat Jun 15 , 2024
Congress leader Mallikarjuna Kharge has warned that the Modi government may topple anytime as the BJP does not have a majority.

You May Like