நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். இந்த தீவிபத்தில் மூதாட்டி பெரியக்காள் (73), தில்லை பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் தில்லைகுமார் உயிரிழந்தனர்.

மேலும், வீட்டின் கட்டிட இடுபாட்டிற்குள் சிக்கி தில்லைகுமாரின் மனைவி பிரியா, தாய் செல்வி ஆகியோரும் உயிரிந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு வெடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.