அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்படி, அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் superbowl parade என்ற அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், துப்பாக்கியுடன் இருவர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அந்த நபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள், கன்சாஸ் நகரத்தின் செயின்ட் லூக் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்தித் தொடர்பாளர் லாரல் கிஃபோர்ட் கூறினார்.
.