fbpx

மத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு..!! 8 பேர் சுருண்டு விழுந்து பலி..!! பெரும் பரபரப்பு..!!

ஜெருசலேமில் யூத மத வழிபாட்டு தலம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால், இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரே அரசு முயற்சிக்கிறது. இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதற்கிடையே, ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குக் கரையின் போராளிகளின் கோட்டையான ஜெனின் அகதிகள் முகாமில் நேற்று நடத்திய சோதனையின்போது இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறினர்.

மத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு..!! 8 பேர் சுருண்டு விழுந்து பலி..!! பெரும் பரபரப்பு..!!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல், மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது. இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Chella

Next Post

ரூ.9,000 ஊதியம்...! மின் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sat Jan 28 , 2023
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

You May Like