கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 200ஆக அதிகரித்துள்ளது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து முதல் நபராக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க முன்வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.
Read More : Kerala | நிலைகுலைய வைத்த நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு..!!