சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் தொடங்கியதன் மூலம், நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.
நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது 4ஜி சேவைக்கு வழங்கப்படும் கட்டணமே, 5ஜி சேவைக்கு வசூலிக்கப்படும் என்றும், பின்னர் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வரும் அக்.22ஆம் தேதி முதல் அக்.26ஆம் தேதிக்குள் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம், 5ஜி சேவை எப்போது முதல் வழங்கப்படும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை 200 நகரங்களில் இன்னும் 6 மாதங்களில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.