fbpx

மாதத்தின் முதல் நாள்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.5,686-க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,488-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ1.20 குறைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77க்கும், கிலோ வெள்ளி விலை ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளிலேயே தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

'இந்த நேரத்தில் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்’..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Wed Nov 1 , 2023
‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். அதுவும் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சுற்றுச்சூழலை […]

You May Like