இந்த ஆண்டு சந்திர கிரகணம், சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி நாளான இன்று நிகழ்கிறது.
நம்மில் சிலருக்கு சந்திர கிரகணம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் வருவதை தான் சந்திர கிரகணம் என்பார்கள். அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி என்ற மாதிரி ஒரே நேர்க்கோட்டில் மூன்று கோள்களும் வரும். இந்த மாதிரி வரும்போது பூமியினுடைய நிழல் சந்திரனின் மேலே விழுவதால் தற்காலிகமாக சந்திரன் மறையும் நிகழ்வை சந்திர கிரகணமாக கருதுகிறோம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அண்மையில் தான் முடிந்த நிலையில், முதல் சந்திரகிரணம் சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி நாளான இன்று நிகழ்கிறது.
இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும் வகையில் ஏற்பட உள்ளது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் இந்த கிரகணம் நிகழ உள்ளது. உலகிலுள்ள 5 கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஆகியவை அடங்கும். பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் தெளிவாக காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, இந்தாண்டின் முதல் பகுதி சந்திர கிரகணம் இரவில் 8.44.11 மணியளவில் தொடங்கும். இதன் உச்சக்கட்ட கிரகணம் இரவு 10.52.59 மணியில் தான் வருகிறது. இந்த கிரகணமானது வரும் மே 6ஆம் தேதி அன்று அதிகாலையில் 01.01.45 மணியளவில் தான் முடிவடைகிறது.
ராகு – கேது ஆகியவை நிழல் கிரகங்கள் என்கின்றன ஜோதிட சாஸ்திரம். ராகு அல்லது கேது இருக்கும் ராசியில் சூரியன், சந்திரன் சஞ்சாரம் இருக்கும்போது சூரியன் அல்லது சந்திரன் கிரகணம் வருகிறது என்பது ஜோதிடத்தின் கூற்று. இதைத்தான் ராகு சூரியனை விழுங்குவதாகவும் சந்திரனை விழுங்குவதாகவும் ஜோதிடம் கூறுகிறது. சந்திர கிரகணத்தால் ஏற்படும் கிரகமாற்றங்களின் காரணமாக 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. சிம்மம், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.