fbpx

பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண்.. டாடா குடும்பத்தின் வைரம்..!! யார் இந்த மெஹர் பாய் டாடா?

பாரம்பரிய பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமை பெற்ற மெஹர் பாய் டாடாவின் சிறப்புகளையும், பன்முகத்தன்மை பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்..

மைசூரில் பிறந்த மெஹர் பாய் விளையாட்டு, சமூக சேவை, சீர்திருத்தம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற புதுமையான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரின் பங்கு முக்கியம் வாய்ந்தது. ஜாம்செட்ஜி என். டாடாவின் மூத்த மகனான டோராப்ஜி டாடாவை தனது பதினெட்டாம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மெஹர் பாய், 1924 பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். பாரம்பரிய பார்ஸி சேலை அணிந்து கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெரிய அளவில் பேசப்பட்டது. பாரம்பரிய ஆடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் மெஹர் பாய் பெற்றார்.

1900ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஏலத்தின்போது அவரது கணவர் டோராப்ஜி டாடாவால் 245.35 காரட் எடை கொண்ட ஜுபிலி டைமண்ட் வாங்கப்பட்டது. அது புகழ் பெற்ற கோகினூர் வைரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து டாடா குழுமம் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. நிறுவனத்தைக் காப்பாற்றவும், எண்ணற்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொருட்டும், தனது குடும்பத்தின் அரிய சொத்தான ஜூப்லி வைரத்தை அடமானம் வைத்தார்.

அதன் மூலம் கணிசமான நிதியை திரட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்தார். நிதித்தடைகளை சமாளித்து இறுதியில் டாடா குடும்பத்திடம் அந்த வைரம் வந்து சேர்ந்தது. பின்பு அந்த வைரம் விற்கப்பட்டு டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மற்றும் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க சேவைகளாக மாறின.

பொதுவாக, பெண்கள் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருள்களை விற்கவோ, அடகு வைக்கவோ அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பெரிய நிறுவனத்தின் நன்மைக்காக தனிப்பட்ட தியாகங்கள் அவசியம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது மெஹர் பாயின் செயல். தனது 52வது வயதில் லூக்கேமியா நோயால் பாதிக்கப்பட்டு இவ்வுலகத்தை விட்டு பிறிந்தார்..

Read more ; குளிர்காலத்தில் கண் எரிச்சல் ஏற்படுகிறதா..? கண் ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்க.. டாக்டர் அட்வைஸ்…

English Summary

First woman to participate in Olympics in Parsi dress.. Diamond of Tata family..!! Who is this Meher Bhai Tata?

Next Post

”ரூ.200 தருவதாக கூறியதால் தான் வந்தோம்”..!! அவர்களுக்கே தெரியாமல் தவெகவினரை பாஜகவில் இணைத்த நிர்வாகிகள்..?

Tue Dec 17 , 2024
On the stage of the ceremony, some executives who had left the Naam Tamilar Party joined the BJP in the presence of Sarathkumar.

You May Like