இன்று காலை குஜராத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். டாங் மாவட்டத்தில் உள்ள சபுதாரா மலைப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 48 பயணிகள் இருந்ததாக போலிஸார் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் த்ரயம்பகேஷ்வரில் இருந்து குஜராத்தின் துவாரகாவுக்கு வந்து கொண்டிருந்த போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
Read more : சிக்கன் விலை உயர்வு.. ரேட்டை கேட்டு ஆடிப்போன சிக்கன் பிரியர்கள்..!! எவ்வளவு தெரியுமா..?