fbpx

சீறி பாய்ந்த குண்டு! ஐந்து வயது சிறுவன் படுகாயம்! ராணுவ ஒத்திகையில் விபரீதம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மீது பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கண்காட்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்திருந்தனர். இந்த கண்காட்சியில் அவர்கள் துப்பாக்கி சுடுதல் போன்ற பாதுகாப்பு ஒத்திக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வுகளின் போது எதிர்பாராத ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராணுவ வீரர்கள் சித்புரா கிராமத்தில் கண்காட்சியின் போது துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு ராணுவ வீரரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக சென்ற குண்டு ஒன்று அந்த கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனின் உடலில் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். இதனைத் தொடர்ந்து காயமடைந்த சிறுவனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ ஒத்திகையின் போது சிறுவன் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

கருப்பு திராட்சை பழம் மற்றும் விதையில் இருக்கும் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் இதோ!... யாரெல்லாம் சாப்பிடலாம்!

Sun Mar 26 , 2023
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் கருப்பு திராட்சையில் உள்ள நன்மைகள் மற்றும் பயன்களை காணலாம். உலகில் மொத்தம் 300 வகை திராட்சைகள் உள்ளன. பொதுவாக நமக்குத் தெரிந்த திராட்சை வகைகள் என்றால் கருப்பு திராட்சை,பச்சை திராட்சை,பன்னீர் திராட்சை,காஷ்மீர் திராட்சை என சில வகைகள் மட்டுமே தெரியும். ஆனால் இதை தவிர்த்து ஹைதராபாத் திராட்சை ஆங்கூர் திராட்சை என பல வகைகள் […]

You May Like