மதுரையில் மோசமான வானிலை காரணமாக தலையிரங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்திலிருந்து மாலை 4.23க்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் வந்தது. 5.45 மணிக்கு வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மழை மற்றும் மோசமான வானிலையால் வானில் விமானங்கள் மதுரை விமா நிலையத்தில் வட்டமடித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து 5 மணிக்கு கிளம்பிய விமானம் 6 மணிக்கு தரையிரங்க வேண்டிய விமானம் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பெங்களூருவில் இருந்து புறப்பட்ட விமானமும் 6.30க்கு மதுரையில் தரையிரங்காமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது.
மழை காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் மழை நின்ற பின்னரும் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வானில் தெளிவான சூழ்நிலை இல்லாததால் தலையிரக்க முடியவில்லை என கூறப்படுகின்றது.