ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்ஷ்யாம் ராய் (35). இவர், சரிதா தேவி (32) என்ற இளம்பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தொடர்பு வைத்திருந்தார். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராயிடம் சரிதா வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் வாலிபர்.
இந்நிலையில், ராயிடம் தன்னைத் திருமணம் செய்ய முடியுமா, முடியாதா என சரிதா தேவி கேட்டுள்ளார். திருமணம் செய்ய முடியாது என கன்ஷ்யாம் ராய் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரிதாதேவி, கன்ஷ்யாமில் ஆணுறுப்பை கத்தியால் வெட்டினார். இதனால், ரத்த வெள்ளத்தில் கன்ஷ்யாம் ராய் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கன்ஷ்யாம் ராய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, காவல் நிலையத்தில் கன்ஷ்யாம் மற்றும் சரிதா இருவரும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,” ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள கன்ஷ்யாம், சரிதாவை காதலித்து வந்துள்ளார். செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். திருமணம் செய்வதாக உறுதியளித்தபடி சரிதாவுடன் கன்ஷியாம் நெருங்கிய உறவில் ஈடுபட்டார்.
இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சரிதா வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவரை திருமணம் செய்ய கன்ஷ்யாம் மறுத்ததால் அந்த ஆத்திரத்தில் சரிதா இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.